பல வழிகள் இருக்கிறது; ஆனால் இதுதான் மிகவும் எளிமையான வழி!

உங்கள் பிஎஃப் தொகையானது தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை ஒருவர் சரிபார்க்க பல வழிகள் இருந்தாலும் கூட, இக்கட்டுரையின் வழியாக மிகவும் எளிமையான ஒரு வழியைத்தான் நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம். அதாவது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பவதின் வழியாக நீங்கள் உங்களின் பிஎஃப் கணக்கு விவரங்களை பெறலாம்.


இதை சாத்தியப்படுத்துவதற்கு முன்னர், அதாவது கீழே தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் செய்வதற்கு முன்னர், ஒருவர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உங்களின் யுஏஎன் (UAN) ஆக்டிவ் ஆக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும், ஈபிஎஃப்ஒ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் உங்களின் UAN ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்யலாம் (உங்களின் UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி என்கிற வழிமுறையை கட்டுரையின் முடிவில் பகிர்ந்துள்ளோம்). பின்னர் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், உங்கள் ஸ்மார்ட்போனில் எஸ்எம்எஸ் சேவை இருக்க வேண்டும்.