நம்மில் பெரும்பாலானவர்கள் தங்களின் பிஎஃப் (PF) தொகை தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா, இல்லையா என்பதை சோதிப்பதே கிடையாது. இதுவொன்றும் அவ்வளவு பெரிய தேசக்குற்றம் கிடையாது தான், இருப்பினும் கூட உங்களின் வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) பற்றி, அதாவது Provident Fund பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமான பணிகளில் ஒன்றாகும்.
ஒரு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கழித்து அவர்களின் ஈபிஎஃப் கணக்கில் (EPF) டெபாசிட் செய்யும் தொகையைத்தான் பிஎஃப் என்கிறோம் ஆகும். அந்த தொகை தவறாமல் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது மிகவும் சிரமமான வேலை என்று நீங்கள் கருதினால் - அது முற்றிலும் தவறு என்பதை இக்கட்டுரையின் முடிவில் நீங்களே உணர்வீர்கள்