உங்கள் மகனை உளவியல்ரீதியாக அடிமையாக்கிவைத்துள்ளார் அந்தச் சாமியார். அவரின் பெயரை உச்சரிப்பதையும், அவர் படத்துக்கு பூஜைசெய்வதையும் முதலில் தடுங்கள்
ஞான அஞ்சனம்'. இந்தப் பெயரை கேட்டாலே அதிர்கிறார்கள் நித்தியானந்தாவிடமிருந்து பிரிந்து வந்தவர்கள். “பல ஆண்டுகளாக எங்களை வசியப்படுத்தி வைத்திருந்ததே இந்த ஞான அஞ்சனம்தான்” என்று சொல்லி நம்மை அதிரவைக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள். `வசிய மை தடவி வலைக்குள் விழவைத்துவிட்டார்' என்றரீதியில் இருக்கின்றன அவர்கள் சொல்லும் சம்பவங்கள்.
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் நடைபெறும் 21 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கச் சென்றுள்ளார், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன். பிடதிக்குச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஒருகட்டத்தில் `சந்நியாசி ஆகப்போகிறேன்' என்றார் இளைஞர்
. அதிர்ந்துபோன பெற்றோர், பிடதிக்குச் செல்கி றார்கள். மகனை மீட்க பலகட்டப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவை அவ்வளவு சுலபமானதாக இல்லை. 'உங்கள் மகன் வந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
நாங்கள் என்ன கட்டிப்போட்டா வைத்திருக்கிறோம்?' என்று கூலாகச் சொல்கிறார்கள் ஆசிரம நிர்வாகிகள். மகனிடம் பேசினால் பதிலுக்கு, 'ம்ம்ம்ம்... நித்தியானந்தா பரமஹம்ச யோகம். ம்ம்ம்ம்... நித்தியானந்த பரமஹம்ச யோகம்...' என்று மந்திரம்போல் உச்சாடனம் செய்கிறார்.